Friday, 24 April 2026

கொஞ்ச(ம்) வேண்டும் - யாழிசை செல்வா

 90களில் நடக்கும் கதை இது 

எதற்காகவும் மறுத்தோ மல்லுக்கு நிற்பதோ தெரியாத வாழ்வை மட்டும் வழமையாய் கொண்ட வாழ்வுதான் கருப்பசாமி உடையது. அப்படியான பொழுதில் ஒரு நாள் சித்ரா வருகிறாள் அவன் வாழ்வில்.... பின் நடப்பது என்ன? 


புரட்சிப் புயல் கண்ணன் 

தேர்ந்த பட்டதாரி... வாழ்வோடு கலந்த அரசியலை வகைத்தொகை இன்றி விமர்சிப்பவன். 

சுருக்கெண குத்தும் முள்ளாகவும் சில்லென நனைக்கும் பனியாகவும் இருப்பவன். 

ஒரு நாள் பலியானான்... 

நடந்தது என்ன? 


மாயி மகன் மாயாண்டி 

புரட்சி புயல் கண்ணனின் பள்ளித் தோழன். 

நண்பனின் மறைவுக்கு நியாயம் தேடும் நாயகம் இவன்....

பின் நடந்தது என்ன? 


ஊர் குடும்பர் போத்திராசா 

இவர் தலைமையில் கட்டுக் குழையாத கட்டுப்பாடுகளோடு  நிமிர்ந்த கிராமம்...

மறைந்த நீதியை மறுபடியும் தேடுகிறது....


அறுத்துக் கட்டிய ஆனந்தி 

தொலைந்த வாழ்வின் முகவரியை கொஞ்சம் தேடியதில் தொலைந்தாளா?.... தேர்ந்தாளா....?

நடந்தது என்ன? 


மாப்பிள சம்சுதீன் 

கருப்பசாமியும்‌ சம்சுதீனும் ஒன்றாய் படித்த பள்ளி தோழர்கள்...

நடக்கும் நாடகத்தில் நாயகம் ஆனார்கள்...

நடந்தது என்ன? 


கொஞ்ச நேரமாவது கொஞ்ச வேண்டும்... எனும் சித்ராவின் ஏக்கம்... எதிர்பார்ப்பு... என்னவாய் மாறியது?

காத்திருப்புகள் மட்டுமே கனவாக  இருக்கையில் கடை தேற்றம் எப்படி நடக்கும்?


எதற்கு கொஞ்ச வேண்டும்???



No comments:

Post a Comment