Wednesday, 22 July 2026

கொஞ்ச(ம்) வேண்டும்?! 01

இருளின் மொத்தப் பரப்பையும் புறந்தள்ளி "மிணுக்... மிணுக்"கென ஒளியைச் சிந்திச் சிரித்துக் கொண்டிருந்தது, தூர கிழக்கில் தோன்றித் தெரியும் விடிவெள்ளி! அது புலரப்போகும் விடிபொழுதிற்கும் கழிந்து கொண்டிருக்கும் இரவிற்கும் இடையில் ஒரு பாலமாக இருந்தது. காலங் காலமாக மனிதன் தனக்குத்தானே கணக்கிட்டு கடந்து வந்த காலத்தின் மணிக்கணக்குகளில் ஒன்றுதான் அந்த விடிவெள்ளி! 


அப்படியான வாழ்வின் கணக்கிலிருந்து வழி தவறிப் போய் மீண்டும் பாதை தேடி வந்தடையும் ஒரு வேகத்தில் தான் ஆனந்திக்கு அன்றைய பொழுது புது விடியலைத் தந்திருந்தது.


அன்றைய இரவு முழுவதும் ஆனந்திக்கு ஒரு பொட்டு உறக்கம்கூட வரவில்லை. தன் வாழ்வில் இதுவரை நடந்ததை மறப்பதா? இனி நடக்கப் போவதை ரசிப்பதா? எனப் புரியாத பேதலிப்பில் இருந்தாள் அவள்.

அவள் பிறந்தது முதலே, அவள் கண்டதெல்லாம் கரடு தட்டிப்போன மண்ணோடும் காலம் அறியாத மழையோடும் பொழுதெல்லாம் புரண்டு நிமிர்ந்த மனிதர்களை மட்டுமே அவள் அறிவாள். அவள் வாழ்வு மொத்தத்தில் அறிந்தது, தெரிந்தது என அனைத்தும் இந்த ஊரின் எல்லைக்குள் மட்டுமே அடங்கியிருந்தது.


நேற்று சாவடியில் நடந்ததை நினைக்கும் போது அவளுக்கு நெஞ்சில் திக்கென்று இருந்தது. அப்படி எளிதாய் நடக்கும் என கனவிலும் அவள் நினைத்துப் பார்த்ததில்லை. "வலியும் வேதனையும் தனக்கு வரும் போது தான் உணர முடியும் என்பது எத்தனை உண்மை?" என  ஆனந்தி தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் வீட்டின் வாசலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். 


அப்போது திடீரென வானத்தில் இடி இடித்து மழை கொட்டத் தொடங்கியிருந்தது. மழைத்தண்ணி வாசல் தாண்டி அவள்  வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தது கூடத் தெரியாபடி பழைய நெனப்பில் மிதந்து கொண்டிருந்தாள் ஆனந்தி. அவள் காலை நனைத்துக் கொண்டிருந்த மழைத்தண்ணியால் சுரணை வந்ததும் குடுகுடுவென குழந்தைபோல் ஓடிப்போய் வாசல் கதவை அடைத்து நாதாங்கி போட்டாள். அடுப்பங்கரைக்கு ஓடிச்சென்று அங்கிருந்த பித்தளை பாத்திரங்களை எடுத்து வந்து கூரையில் இருந்து ஒழுகும் நீருக்கு நேராக பாத்திரங்களை வைத்தாள். கூரையின் ஓட்டை வழியாக வந்து கொண்டிருந்த மழைத்தண்ணீர் சொட்டு சொட்டாக பாத்திரத்தில் விழுந்து அந்த இருளை கிழித்துக்கொண்டிருந்தது. ஆனால் அந்த மழை ஆனந்தியை மீண்டும் பழைய நினைவுக்குள் பிடித்து தள்ளியிருந்தது.


எல்லாம் சுகமாய் நடக்கும் என எல்லோரையும் போல் நம்பித்தான் ஆனந்தியின்  அம்மா வேலாயி தன் உறவுக்காரப் பையன்  காளியப்பனை தன் மகளுக்கு கல்யாணம் செய்து வைத்திருந்தாள். ஆனால் நடந்தது என்னவோ வேறு. கண்டதே காட்சி கொண்டதே கோலமென வாழ்ந்து கொண்டிருந்தான் காளியப்பன். உருப்படியாகச் சொல்லிக் கொள்ளும்படி எந்த வேலையும் இல்லாமல் ஊதாரி உதவாக்கரையாக  இருந்ததோடு மைனர் மிதப்பில் சுற்றி வந்து கொண்டிருந்தான் காளியப்பன். வளர்பிறையும் தேய்பிறையும் மாதங்களில் மாறி மாறி வந்து போனதே தவிர ஆனந்தியின் வாழ்க்கையில் வேறு மாற்றம் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. மகளின் துயரை எண்ணி எண்ணி உள்ளுக்குள் மருகிக் கொண்டிருந்தாள் வேலாயி. அப்படியான நாட்களில் ஒருநாள். பக்கத்து ஊர் திருவிழாவில் கூட்டாளிகளோடு குடித்துக் கும்மாளம் போட்ட காளியப்பன், கள்ளச்சாராயம் குடித்ததில் செத்துப் போனான். செய்தி அறிந்ததும் ஆனந்தி திக்கு திசை தெரியாமல் திணறி போய் நின்று விட்டாள். வேலாயிதான் ஒரு வழியாக காளியப்பனின் இறுதிச் சடங்கை செய்து முடித்திருந்தாள். ஏற்கனவே அணு அணுவாய் சிதைந்து கொண்டிருந்த வேலாயி அன்றுமுதல் முழுவதுமாய் வீட்டின் மூலையில் முடங்கிப் போனாள். நாட்கள் மாதங்கள் என கால வெள்ளம் உருண்டோடியதில் நான்கு ஆண்டுகள் கடந்திருந்தது.


அன்றொரு நாள்.... 


சோளக் கதிர் அறுக்கும் வேலைக்கு போயிட்டு வந்திருந்த ஆனந்தி கை கால் கழுவி விட்டு அடுப்பங்கரைக்குள் நுழைந்து சமையல் வேலையை தொடங்கியிருந்தாள். வீட்டுத் திண்ணையில் முடங்கிப் படுத்து கிடந்த வேலாயி அடுப்பங்கரைக்குள் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டு முழித்து எழுந்தாள். "இப்பத்தேன்... வந்தயா தாயி...?"என தன் மகள் ஆனந்தியை பார்த்துக் கேட்டாள் வேலாயி. அண்டாவிலிருந்த அரிசியிலிருந்து காப்பி அரிசி எடுத்து சின்ன குண்டாவில் போட்டாள். பானையிலிருந்து பித்தளை சொம்பு நிறைய தண்ணீர் மோந்தெடுத்து வைத்திருந்த இருந்த அரிசியில் தண்ணீர் ஊற்றி அலசிக்கொண்டே "ஆமா..." எனக் கூறியவள் கடையடைப்பு பக்கமாக விறகைத் தள்ளியதும் நெருப்பு கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. "கருவாட்டு குழம்பு வைக்கட்டுமா..?" என்றவள் வேலாயின் முகத்தை பார்த்தாள். சரி என்பது போல் வேலாயி தலையாட்டினாள். அடுப்பங்கரையின் மூலையிலிருந்த தகர டப்பாவில் இருந்து ஒரு கை நிறைய குச்சிக் கருவாடு அள்ளி எடுத்து கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊர வைத்தாள் ஆனந்தி. 


தன் மகள் செய்யும் வேலையை பார்த்துக் கொண்டிருந்த வேலாயி அவள் அருகில் போய் நின்றவள் "தாயி.." என கூப்பிட்டாள்.


"சொல்லுமா கேக்குது.."


"நான் ஒன்னு சொல்லுவேன்... நீ கோவப்படாம கேட்கணும்..."என்ற வேலாயி உள்ளுக்குள் தான் எடுத்த ஏதோ ஒரு தீர்மானத்தை எப்படியாவது இன்று மகளிடம் சொல்லிவிட வேண்டும் என்ற துடிப்பு ஓடிக் கொண்டு இருந்தது. அதை எப்படிச் சொல்வது எனத் தெரியாமல் தவித்து வந்தவள் அடுப்பங்கரைக்குள் தத்தி தத்தி அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள்.


"இன்னைக்கு நீ ஏதோ முடிவோட பேசுற மாதிரி தெரியுது... என்ன விஷயம்? முதல்ல நீ சொல்லு... மத்தத அப்புறம் பார்ப்போம்.. நீ எதுக்கு இப்ப வீட்டை அளக்கிர மாதிரி நடந்துகிட்டு இருக்க... சட்டுபுட்டுனு சொல்லவந்த விஷயத்தை சொல்லு...."


"பாத்தியா... நான் இன்னும் சொல்லவே ஆரம்பிக்கல... அதுக்குள்ள வேண்டா வெறுப்பா பேசி என்ன விரட்டுற"


"ஏம்மா நீ வேற... ஏற்கனவே காட்டுல் வேலை செஞ்சதுல உடம்பெல்லாம் வலி தாங்க முடியல... நீ என்னடானா .... எதுவுமே சொல்லாம... என்ன போட்டு படுத்தி எடுக்கிற.."


"அது இல்லப்பா... உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்... அதை எப்படி சொல்றதுனு தெரியாம தவிச்சுக்கிட்டு நிக்கிறேன்..."


"ஒன்னு பண்ணு... நீ என்ன நினைக்கிறாயோ அத மறைக்காம சொல்லு... அதுக்குப் பெறகு அது வேணுமா வேணாமா... அப்படிங்கற மத்த விஷயத்தை எல்லாம் பெறகு பாத்துக்கலாம்..." எனச் சொல்லிக் கொண்டே வேலாயியின் கையைப் பிடித்து தன் அருகில் உட்கார வைத்து தானும் அவளருகில் அமர்ந்து கொண்டாள். 


கொஞ்ச நேரம் தன் மகள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த வேலாயி "இன்னும் எத்தனை நாளைக்கு நான் இருப்பேன்னு தெரியாது... "என்ற வேலாயின் வாயை தன் கையால் பொத்தினாள் ஆனந்தி. சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசாமல் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டே இருந்தார்கள். என்ன நினைத்தார்களோ தெரியவில்லை இருவர் கண்களும் குற்றமாகக் தேங்கி வழிந்தது.


அப்போது அடுப்பில் வைத்திருந்த உலை கொதிக்கத் தொடங்கியதும் உலைப் பானையை  மூடியிருந்த தட்டை கீழே தள்ளி இருந்தது. குண்டாவில் இருந்த அரிசியைக் கலைந்து எடுத்து உலையிப் பானையில் போட்டாள். அதன்பின் அதில் தேவையான உப்பைப் போட்டு கரண்டியால் கிண்டிவிட்டாள். கிண்ணத்தில் ஊற வத்திருந்த குச்சிக்கருவாடை அள்ளி எடுத்தவள் கடை அடைப்பில் கொதித்துக் கொண்டிருந்த பாத்திரத்தில் போட்டு வேக வைக்கத் தொடங்கினாள்.


மீண்டும் வேலாயி தன் மகளைப் பார்த்து "தாயி!"என்றாள்.


"சொல்லுமா.."என்றாள் ஆனந்தி.


"சாயங்காலம் குருசாமி அண்ணன் வீட்டுக்கு வந்திருந்தாரு..."


"நீ யார சொல்ற..? நம்ம ஊரு குடும்பர் குருசாமி மாமாவையா சொல்ற?"


"ஆமாம் தாயி... உம் மேலேயும் எம்மா மேலயும் இந்த ஊர்ல அக்கறையோடு இருக்கிறது அவர விட்டா வேர  யாரு இருக்கா சொல்லு...? ஒரு கொடி வழியில் நாங்க எல்லாம் பிறந்தோம்னு  சொல்லிக்கிறதுக்கு இந்த உலகத்துல எனக்கு மிச்சமா இருக்கிறது அவர் மட்டும்தான். அதனாலதான் நமக்கு ஒத்தாசையா இருக்காரு...'


"இத நீ சொல்லித்தேன் எனக்கு தெரியணுமா என்ன?"நீ சொல்ல வந்தத முதல்ல சொல்லு?"


"மறுபடியும் சொல்றேன்... நீ கோவப்படாம கேளு... அப்பத்தேன் நான் சொல்லுவேன்..." என ஒரு சூட்சமத்தோடு தன் மகளைப் பார்த்துச் சொன்னாள் வேலாயி. 


"இன்னைக்கு நீ என்னவோ வித்தியாசமா பேசுற... எதுவா இருந்தாலும் தயங்காமச் சொல்லு... எதுவானாலும் பாத்துக்கலாம்..."


"இன்னும் எத்தனை நாளைக்கு... இப்படி வயசுப் புள்ளைய வீட்டிலேயே வச்சிருக்கப் போற...? உனக்கும் சரி எனக்கும் சரி வயசாகிக்கிட்டே போகுது... காலா காலத்தில புள்ளைய ஒரு நல்ல இடத்துல கட்டி குடுத்துட்டா... போற நம்ம உசுரும்  நிம்மதியா போகும்...  இந்த நினைப்புதான் என்னைய ரொம்ப நாளா அரிச்சுக்கிட்டு இருந்துச்சு. அதுக்கு ஒரு தீர்வு கிடைச்சிருக்கு, ஒரு நல்ல பையன் இருக்கான். நீ சம்மதிச்சா அந்தப் பயலையே பேசி ஆனந்திக்கு கல்யாணம் கட்டி வைக்கலாம். அதுதேன் உன்கிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன்.."அப்படின்னு சொன்னாரு குருசாமி அண்ணே..."


"இப்ப என்ன...? அண்ணனும் தங்கச்சியுமாச் சேர்ந்து மறுபடியும் என்னைய ஒரு குடிகாரப் பயலுகிட்ட தள்ளிவிட பாக்குறீங்களா...? ஏற்கனவே நான் பட்ட ரணம் நெஞ்சுக்குள்ள கிடந்து அறுத்துக்கிட்டு இருக்கு. இப்ப ஏம்மா... புதுசா ஒன்னக் கொண்டு வந்து மேலும் என்ன கஷ்டப்படுத்திப் பாக்க நினைக்கிற...?"


"

அடுக்களை தாண்டி இருந்த படுக்கை அறையில் வைத்திருந்த முக்காலியின் மேல் இரவு ஏற்றி வைத்திருந்த மண்ணெண்ணெய் விளக்கு சன்னமாய் பரப்பிய ஒளியில் விரித்துப் போட்டிருந்த கோரப்பாய் கொஞ்சமும் கலையாமல் அப்படியே இருந்ததை காட்டியது. ஆனந்தி ஒரு கணம் அதை பா

ர்த்துவிட்டு மீண்டும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். 


கொஞ்ச(ம்) வேண்டும்!? - 01 (யாழிசைசெல்வா)

இருளின் மொத்தப் பரப்பையும் புறந்தள்ளி "மிணுக்... மிணுக்"கென ஒளியைச் சிந்திச் சிரித்துக் கொண்டிருந்தது, தூர கிழக்கில் தோன்றித் தெரியும் விடிவெள்ளி! அது புலரப்போகும் விடிபொழுதிற்கும் கழிந்து கொண்டிருக்கும் இரவிற்கும் இடையில் ஒரு பாலமாக இருந்தது. காலங் காலமாக மனிதன் தனக்குத்தானே கணக்கிட்டு கடந்து வந்த காலத்தின் மணிக்கணக்குகளில் ஒன்றுதான் அந்த விடிவெள்ளி! 

அப்படியான வாழ்வின் கணக்கிலிருந்து வழி தவறிப் போய் மீண்டும் பாதை தேடி வந்தடையும் ஒரு வேகத்தில் தான் ஆனந்திக்கு அன்றைய பொழுது விடியக் காத்திருந்தது.

அன்றைய இரவு முழுவதும் ஆனந்திக்கு ஒரு பொட்டு உறக்கம்கூட வரவில்லை. தன் வாழ்வில் இதுவரை நடந்ததை மறப்பதா? இனி நடக்கப் போவதை ரசிப்பதா? எனப் புரியாத பேதலிப்பில் இருந்தாள் அவள்.

அவள் பிறந்தது முதலே, அவள் கண்டதெல்லாம் கரடு தட்டிப்போன மண்ணோடும் காலம் அறியாத மழையோடும் பொழுதெல்லாம் புரண்டு நிமிர்ந்த மனிதர்களை மட்டுமே அவள் அறிவாள். அவள் வாழ்வு மொத்தத்தில் அறிந்தது, தெரிந்தது என அனைத்தும் இந்த ஊரின் எல்லைக்குள் மட்டுமே அடங்கியிருந்தது.

நேற்று சாவடியில் நடந்ததை நினைக்கும் போது அவளுக்கு நெஞ்சில் திக்கென்று இருந்தது. அப்படி எளிதாய் நடக்கும் என கனவிலும் நினைத்தும் பார்த்ததில்லை. "வலியும் வேதனையும் தனக்கு வரும் போது தான் உணர முடியும் என்பது எத்தனை உண்மை?" என  ஆனந்தி தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் வீட்டின் வாசலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

அப்போது திடீரென வானத்தில் இடி இடித்து மழை கொட்டத் தொடங்கி இருந்தது. மழைத்தண்ணி வாசல் தாண்டி அவள்  வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தது கூடத் தெரியாமல். பழைய நெனைப்பில் இருந்தாள் ஆனந்தி. அவள் காலை நனைத்துக் கொண்டிருந்த மழைத்தண்ணியால் சுரணை வந்ததும் குடுகுடுவென ஓடிப்போய் வாசல் கதவை அடைத்து விட்டு அடுக்கலைக்கு ஓடிச்சென்று அங்கிருந்த பித்தளை பாத்திரங்களை எடுத்து வந்து கூரையில் இருந்து ஒழுகும் நீருக்கு நேராக பாத்திரங்களை வைத்தாள். கூரையின் ஓட்டை வழியாக மழைத்தண்ணீர் சொட்டு சொட்டாக பாத்திரத்தில் விழுந்து அந்த இருளை கிழித்துக்கொண்டிருந்தது. ஆனால் அந்த மழை ஆனந்தியை மீண்டும் பழைய நினைவுக்குள் பிடித்து தள்ளியிருந்தது.

எல்லாம் சுகமாய் நடக்கும் என எல்லோரும் போல் நம்பித்தான் ஆனந்தியின்  அம்மா வேலாயி தன் உறவுக்காரப் பையன்  காளியப்பனை தன் மகளுக்கு கல்யாணம் செய்து வைத்திருந்தாள். ஆனால் நடந்தது என்னவோ வேறு. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என வாழ்ந்து கொண்டிருந்தான் காளியப்பன். உருப்படியாகச் சொல்லிக் கொள்ளும்படி எந்த வேலையும் இல்லாமல் ஊதாரி உதவாக்கரையாக  இருந்ததோடு மைனர் மிதப்பில் சுற்றி வந்து கொண்டிருந்தான் காளியப்பன். வளர்பிறையும் தேய்பிறையும் மாதங்களில் மாறி மாறி வந்து போனதே தவிர ஆனந்தியின் வாழ்க்கையில் வேறு மாற்றம் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. மகளின் துயரை எண்ணி எண்ணி மருகிக் கொண்டிருந்தாள் வேலாயி. அப்படியான நாளில் ஒருநாள். பக்கத்து ஊர் திருவிழாவில் கூட்டாளிகளோடு கும்மாளம் போட்ட காளியப்பன் கள்ளச்சாராயம் குடித்ததில் செத்துப் போனான். 

அடுக்களை தாண்டி இருந்த படுக்கை அறையில் வைத்திருந்த முக்காலியின் மேல் இரவு ஏற்றி வைத்திருந்த மண்ணெண்ணெய் விளக்கு சன்னமாய் பரப்பிய ஒளியில் விரித்துப் போட்டிருந்த கோரப்பாய் கொஞ்சமும் கலையாமல் அப்படியே இருந்ததை காட்டியது. ஆனந்தி ஒரு கணம் அதை பார்த்துவிட்டு மீண்டும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.