Saturday, 5 April 2025

கனவிலாவது வருவாயா யாழிசை செல்வா

கனவிலாவது வருவாயா 

=========================

இதழ் துடிக்கும் முன்பே 

இதயம் படித்து

கனவுகளைப் பெருக்கி 

காற்றின் கரம் பற்றி 

கற்பனைத் தேரேறி 

சல்லாபத்தோணியாய்

நீந்தி விளையாடும் 

அலை தீண்டும் குறும்பாய் பரவி 

ஆழியாய் என்னை அனைத்துக் கொள்ள 

கனவிலாவது வருவாயா....?


கவிஞர் யாழிசைசெல்வா 

05/04/2025



No comments:

Post a Comment