தேரைப் பூச்சி போல மனசுல ஒட்டி நிக்கிறியே...
=============================================
சுங்குடி சேலை கட்டி
மின்னலா சிரிச்சு
ஆத்து மேட்டோரம்
அத்தி பூத்தாப்புல
பிஞ்சு முத்தம் கொடுத்தவளே!
சோளக்காட்டுல சொக்கி நீ நடந்தப்ப
மேலக் காத்தடிச்சு
என் நெஞ்ச பரிச்சவளே
மேகம் கருக்குது மேனி குளிருது
தாகம் இல்லாம தவிச்சு நிக்கிறேன்
விடியல் கருக்கலிலே
மாலை மாத்திக்க மறக்காம
அய்யனார் கோயில் பக்கம்
காத்து நிப்பதாக காத்துல கடுதாசி போட்டவளே!
இன்னுமா விடியலைன்னு என் மனசு துடிக்குது
ஏன் சோட்டுக் கிளியே எங்கே போன?
தேரை பூச்சி போல மனசுல ஒட்டி நிக்கிறியே...!
கவிஞர் யாழிசைசெல்வா
11/03/2025
No comments:
Post a Comment