Saturday, 8 March 2025

நீயும் நானும் யாழிசை செல்வா

நீயும் நானும்....

================

நீண்டு கிடக்கும் ஆகாயத்தை பிடிக்கும்//01

அருண் தவக் கனவு உனக்கு //02

வண்ணத்தை சூடிக்கொண்ட 

மேனியின் படபடப்பு //03

எண்ணத்தைத் தூண்டும் 

இன்பப் பூரிப்பு//04

எதுவரை முடியுமோ 

அதுவரை தொடரும்//05

விடாத முயற்சியின் 

வெற்றி விளையாட்டு//06

அங்குமிங்கும் நகர்ந்து 

ஆளவட்டம் போடுகிறாய்//07

இன்னும் மிச்சம் 

இருக்கும் வேடிக்கை!/08

அழகே உருவான 

வண்ணத்துப் பூச்சியே//09

இதோ வருகிறேன் 

நானும் துணையாக....!//10

கவிஞர் யாழிசைசெல்வா 

07/03/2025


கவிதை தூவானம் படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை


No comments:

Post a Comment