Wednesday, 5 March 2025

விசித்திரம் நிறைந்த சரித்திரம் அவள் - யாழிசை செல்வா

விசித்திரம் நிறைந்த சரித்திரம் அவள் 

=====================================

ஆதியின் நெருப்பை கையில் கொண்டவள் //01

தாய்மையின் வரமாக எழுந்து நின்றவள் //02

சுமைகளை கொண்டாடித் திளைக்கும் தமக்கை //03

வேடிக்கைகளை விரும்பிப் பற்றும் தங்கை //04

ஆழித்தேரின் சுழலும் சக்கரமாய் தோழி //05

அன்பை வழிந்து சுமக்கும் அத்தை //06

எதிரில் பூக்கும் இன்னொரு தாய் /07

வரங்களைப் பேணிப் போற்றும் வான்முகில் //08

இன்னும் எத்தனையோ சந்தங்கள் பேசலாம்//09

இவளுக்கு எத்தனையோ முகவரிகள் சூடலாம்.//10

விசித்திரம் நிறைந்த சரித்திரம் அவள்//11 

பிறருக்காக தன்னையே தொலைத்த தரித்திரமவள்...!//12

கவிஞர் யாழிசைசெல்வா 

04/03/2025

No comments:

Post a Comment