Friday, 7 March 2025

நெஞ்சின் மாமழை நீயே யாழிசை செல்வா

 நெஞ்சின் மாமழை நீயே 

========================

தொட்டும் விட்டும் செல்கிறது தூறல் 

விழிப்பட்டதும் அனல் மொட்டாய் மலர்ந்து

இதழ் மொட்டு துடிக்கிறது கண்ணாளா...! 

காற்றைத் தூதுவிட்டு கவிதை பேசி

அலைபோல் எழுந்து ஆலிங்கனம் செய்யும்

எனது நெஞ்சின் மாமழை நீயே...!

கவிஞர் யாழிசைசெல்வா 

07/03/2025


இதயத்தின் பூக்கள் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை





No comments:

Post a Comment