Wednesday, 5 March 2025

மல்லியப்பூ பூத்தது போல் மனசெல்லாம் பூத்திருக்க... யாழிசை செல்வா

மல்லிகை பூ பூத்தது போல் 

==========================

மனசெல்லாம் பூத்திருக்க...

===========================

சின்ன இடைவெட்டி //01

சிங்கார நடை நடந்து //02

ஒய்யாரக் கொண்டையில //03

ஒத்த மல்லிகைச் சரம் வச்சிக்கிட்டு //04

கத்தாழ கண்ணால குத்தாம கொல்லுறியே....!//05

கத்தரிப் பூவழகா கனகாம்பர தோள் அழகா //06

எனச் சொல்லாம சொல்லிக்கிட்டு//07

நிக்காம சிக்காம நெடுந்தூரம் போறவளே....!//08

ஆற்றங்கரையோரம் நெல்லி மரம் பூத்திருக்க //09

கண்டாங்கி சேலைகட்டி காத்துல தூது விட்டவளே...!//10

மல்லிகைப்பூ  பூத்தது போல் //11

மனசெல்லாம் பூத்திருக்கு//12

கவிஞர் யாழிசைசெல்வா 

05/03/2025






No comments:

Post a Comment