காலம் கிழித்த கோடு கரைகிறது //01
வாசல் தாண்டி நீளும் பயிற்சி //02
வளை கரம் எழுதும் முயற்சி// 03
இன்னும் எத்தனையோ இடர்கள் தகர்ந்தன //04
இதுவரை பூட்டி வைத்தவை எழுகின்றன //05
கட்டிய கோபுரம் கலகலத்துப் போனது //06
காகிதத்தில் கிறுக்கியதை காற்றும்கூட பேசுகிறது //07
வாசனை மொழிகள் புலக்கடைக்கு போனது //08
புதிய வானம் நீண்ட தொடக்கம் //09
இதழ்கள் இசைக்கும் இன்னிசை முழக்கம் //10
அலைந்து ஆர்ப்பரித்தவை
சிதைந்து சிறுத்தது //11
பாருக்கும் பயிற்றுவிக்கும் புதிய தொடக்கம் //12
விடியலை தொடங்கி வைக்கும் கானத்தை //13
படிக்கும் கண்களும் துடிக்கும் இமைகளும் //14
தோள்களில் தாங்கிக் கொண்டு தாலாட்டியது//15
ஆதியில் தொட்டது அமர்களமாய் தொடர்கிறது//16
கவிஞர் யாழிசைசெல்வா
திருப்பூர்
04/03/2025
No comments:
Post a Comment