Friday, 7 March 2025

காதல் விழி பார்வையிலே யாழிசை செல்வா

காதல் விழிப்பார்வையிலே

===========================

சித்திரை திருவிழாவில் 

முத்திரை பதிக்கும்//01


சித்தினி சிரிப்பில் 

சில்வண்டு ரீங்காரம்//02


வெடுக்கென சுண்டும் 

சுந்தர இடையில்//03


செவ்வண்ண பட்டுத்

தாவணி உடுத்தி//04


மான் தோற்கும் 

துள்ளல் நடையில்//05


தேன் தடவிய 

இதழ் பேசும்//06


மோகன ராகம் 

மூச்சு முட்ட//07


சந்தன சிலையின் 

சதங்கை ஒலிக்க//08


இன்பம் பெருக்கும் 

இன்னிசை முழங்க//09


காதல் விழிப் 

பார்வையில் கவிதையானாள்!//10


கவிஞர் யாழிசைசெல்வா 

07/03/2025


ரோசா கூட்டம் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கவிதை




No comments:

Post a Comment