🌾56.சந்தனச்சிலை!🌾
கடற்கரையெங்கும் செழித்து வளர்ந்து கிடந்த சுரப்புண்ணை மரங்கள் சுழன்றடித்த காற்றுக்கு ஏற்ப அசைந்தாடிக் கொண்டிருந்தான. ஆர்ப்பரித்து கொண்டு ஓடிவந்து அலை கரங்கள் கரையைத் தழுவிக்கொண்டு மெல்லத் திரும்பிக் கொண்டிருந்தன. இருளை துடைத்துக் கொண்டிருந்த வெண்ணிலவின் ஒளி இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தன. வானில் இருந்து துளித்துளியாய் பனிமழை பொழிந்து கொண்டிருந்தது. அத்தனையும் மறந்து கடற்கரை மணலில் தன் உடலை புரட்டிக் கொண்டிருந்த மருதனும் "ஙீஙீஙீ" யென தன் நீண்ட வாயைப் பிளந்து கனைத்துக் கொண்டிருந்தான்.
திடீரென மருதன் கனைத்ததால் இதழில் கவிதை செய்து கொண்டிருந்த சாளுக்கிய இளவரசி மதிமோகினியும் சோழ சையினியத்தின் உப தளபதி இளம்வழுதியும் புறவுலகிற்கு வந்திருந்தார்கள்.
இராஜமோகினியின் விழிகளில் படர்ந்த வெட்கத்தை ரசித்தபடி "தேவி! உனக்கு பொருத்தமான பெயர் தான் வைத்துள்ளார்கள்!" என்றான் இளம்வழுதி.
"இத்தனை நாளும் இல்லாமல் அப்படி என்ன புதுமையைக் கண்டு பிடித்தீர்கள்!" அவனது விழிகளில் தனது விழிகளை சுழல விட்டபடி கேட்டாள் இராஜ மோகினி.
"புதுமை தான், நீ என்றும் எனக்கு புதுமை தான்!"அவளது கயல் விழிகளை ரசித்தப்படியே கூறினான்.
"போதும் போதும் உங்கள் போக்கிரித்தனம்! நான் கேட்டதற்கு பதில் கூறுங்கள்!" அதரங்களில் குறும்பு கொப்பளிக்க கூறினாள் இராஜமோகினி.
"மதிமோகினி! எத்தனை பொருத்தமான பெயர்!" அவனது இதழ்களில் அழுத்தமாய் உச்சரித்தான்.
"அடேயப்பா! எதற்கு இத்தனை அழுத்தம்! இயல்பாக கூறினால் போதாதா?! " கயல் விழிகளில் காதல் கொப்பளிக்க கூறினாள்.
"உனது பெயரின் முதல் பகுதியான 'மதி' என்றால் நிலவு....." என்றவன் பாதியில் நிறுத்திவிட்டு அவரது வதனத்தை குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது விழிகள் செய்த மாயத்தை ஓர விழியால் பார்த்தபடி"ம்ம்ம்" யென மொழிந்தாள் இராஜமோகினி!
"அடுத்துள்ள 'மோகினி' என்றால் பேரழகு. முதல் சொல் பிரமிப்பு என்றால் அதனைத் தொடர்ந்து உள்ள சொல்லோ பிரமிப்பின் புதையல் என்றுதான் கூற வேண்டும். 'நிலவின் பேரழகு' ஆகா சொல்லும் போதே தேன் குடித்த சுகம் உள்ளூர பரவி விடுகிறது" என கூறிக்கொண்டே இராஜமோகினியின் இதழ் கொய்ய முற்பட்டான் இளம்வழுதி.
அடுத்து அவன் எங்கே வரப் போகிறான் என உணர்ந்திருந்தாலோ என்னவோ சட்டென கடற்கரை மணலில் புரண்டு படுத்தாள். அவள் புரண்டு படுத்ததால் இளம்வழுதியின் விழிகள் அவளது இளமையின் வெகுமதியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. இது என்னடா சோதனை? இதற்கு அப்படியே இருந்து இருக்கலாம் போல் உள்ளதே என எண்ணியவள் விலகிக் கிடந்த சேலையை எடுத்து இடையில் நன்கு சொருகிக் கொண்டாள் சந்தனச்சிலை.
அவளை நோக்கி நகர்ந்தவனை "போதும் உங்கள் ஆராய்ச்சியை அங்கிருந்தே சொல்லுங்கள் கயல்விழிகளில் குறும்பு கொப்பளிக்க கூறினாள்.
"மோகினி எப்பொழுதும் கேட்கும் வரத்தை கொடுக்க வல்லவள் இன்று நான் கேள்விப்பட்டு உள்ளேன். இங்கு என்னவென்றால் அதற்கு மாறாக உள்ளது'" விழிகளில் அவளை விழுங்கிவிடும் தவிப்பு தெரிந்தது.
"இது எந்த ஊரில் சொன்ன விளக்கம்! இதுவரை இப்படி ஒரு விளக்கத்தை நான் கேட்டதே இல்லை. தங்களுக்குத் தேவை என்றால் இல்லாததையும் பொல்லாததையும் ஏற்றிக் கூறுவதில் ஆண்கள் வல்லவர்கள். அதில் தாங்களும் அடக்கம் போலும்!" மயக்கும் கயல்விழிகளால் அஞ்சல் செய்தாள்.
"இது மட்டும் எந்த ஊரில் கூறினார்களாம். நானும் இப்படி ஒரு விளக்கத்தை கேட்டதே இல்லை" அப்பாவி போல் தான் முகத்தை வைத்துக் கொண்டான்.
"அடடே! இத்தனை நேரம் தாங்கள் செய்தது அனைத்தும் மறந்து போனதோ என் மன்மதரே! " அவனை நோக்கி மறுபடியும் புரண்டு வந்து நெஞ்சில் தன் தலையை சாய்த்துக் கொண்டாள்.
"தேவி! உன்னுடன் இருக்கும் போது அனைத்தையும் மறந்து விடுகிறேன்!' இராஜமோகினியின் கார்கூந்தலை வருடிக் கொண்டே கூறினான்.
"எனக்கு மட்டும் என்னவாம்! தாங்கள் கூறி விட்டீர்கள் அவ்வளவுதான்" அவனது நெஞ்சிலிருந்து கயல் விழிகளை உயர்த்தியபடி கூறினாள்.
"இன்று என்னவோ தெரியவில்லை வெண்மதி வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் பூரண வெளிச்சத்தை பூமியின் மீது பாய்ச்சி உள்ளாள். பூமியில் ஒரு பூரண நிலவு போதாது என்று நினைத்து விட்டாளோ என்னவோ?" இராஜமோகினியின் ஒளிபொருந்திய வதனத்தைப் பார்த்துக் கொண்டே கூறினான்.
"போதும் உங்கள் புகழ்ச்சி!" என்றவள் வதனம் குங்குமமாய் சிவந்து போனது!
"அது மட்டுமல்ல! பனித்துளியும் மழைத்துளியாய் மாறி பூமியின் தேவதைக்கு வாழ்த்துக்கள் வாசிக்கின்றன போலும்!" அவளது குழி விழுந்த கன்னத்தில் இதழ் பதித்தான்!
அவனது தலையைப்பிடித்து தனது இளமையின் வெகுமதி மேல் சாய்த்துக் கொண்டாள். அவனது முரட்டுக் குழல்களில் பிஞ்சு விரல்களால் கோலமிட்டுக் கொண்டிருந்தாள்.
"தேவி! " அவளது இளமையின் வெகுமதியிலிருந்து தலையை அகற்றாமலே அழைத்தான்.
"கூறுங்கள்!"
"வெகு நேரம் ஆகிவிட்டது!"
"அதற்கென்ன?"
"கடற்கரையை காவல் காத்துக் கொண்டிருக்கும் சோழத்தின் காவல் இரவாடிகளான காவலர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்"
"இதில் நினைப்பதற்கு என்ன இருக்கு?"
"மணமாகாத இருவர் நட்ட நடுநிசியில் இத்தனை நேரம் இங்கு இருப்பதை பார்க்கும் யாருக்கும் தோன்றக்கூடியது தான்!" என அவளது கயல் விழிகளைப் பார்த்தபடி கூறினான்.
"அப்படி என்ன நினைப்பார்கள்?" செவ்விதழில் குறும்பு கொப்பளிக்க கூறினாள்!
"ஏன் உனக்குத் தெரியாதா? "
"நீங்கள் தான் புதிது புதிதாக விளக்கம் கொடுப்பதில் விற்பன்னர் ஆயிற்றே! அதனால் தான் கேட்டேன்" மீண்டும் குறும்புடன் கூறினாள்!
"புதிதாகச் சொல்ல என்ன உள்ளது? காலங்காலமாக நடைமுறையில் இருந்து வரும் வழக்கம் தானே அது!'
"அதே நடைமுறையில் மனமொத்த காதலர்கள் சேர்ந்து வாழ்வதும் வழக்கம் தானே?"
"எதற்கும் கால நேரம் உண்டல்லவா?"
"காதலுக்கு நேரம் ஏது?" என்றாள் சித்தினி அவள் சிருங்காரமாய் சிரித்துக் கொண்டே கூறினாள்!
"நேரமும் காலமும் இல்லை என்றால், ஊர் ஏன் அலர் தூற்றுகிறது?"
"தூற்றுவதும் போற்றுவதும் நாம் அமைத்துக் கொள்ளும் வாழ்க்கையில் தான் உள்ளது!" என்றவள் அவனது விழிகளை ஏக்கத்தோடு பார்த்தாள்!
"காத்திரு கண்மணி! காலம் வரும் நமக்காக!" என்றவன் அவளை நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டான்.
கடலிருந்து எழும்பிய குளிர்ந்த காற்று அவர்களைத் தொட்டு வருடியதும் "உனது தந்தையாரிடமிருந்து ஏதேனும் தகவல் வந்ததா தேவி?" என்றான்.
"வந்தது அன்பரே"
"ஏதேனும் சிறப்பு தகவல்கள் உள்ளனவா?"
"வழக்கமான நல விசாரிப்புத்தான்! கூடவே...." செவ்விதழை சுளித்தபடி கூறினாள்.
"கூடவே என்ன?" ஆவல் மேலோங்கக் கேட்டான்.
"எப்பொழுது தாய்நாடு திரும்புகிறாய் என கேட்டிருந்தார்!" கவலையோடு கூறினாள்!
"நீ என்ன கூறினாய்?" ஆவலாக கேட்டான்!
"இன்னும் சில காலம் கழித்து வருவதாக பொய் கூறினேன்" அவனது விழிகளை பார்த்தபடி கூறினாள்.
"உண்மையை எடுத்துக் கூறுவது தானே!"
"காலம் கனியட்டும் என்று தாங்கள்தான் கூறினீர்கள். அதற்குள்ளாக மறந்து விட்டதா?"
"மறக்கவில்லை..... என்றாயினும் ஒருநாள் தெரிந்து தானே ஆக வேண்டும்"
"அந்தத் திருநாள் என்று என நீங்கள் தீர்ப்பு எழுதும் வரை இருக்கட்டும் என நினைத்தேன்"
"சரி எழுந்து வா! புறப்படலாம்!" அவள் தளிர்க்கரங்களைப் பிடித்து தூக்கினான்!
"அதற்குள்ளாக போக வேண்டுமா?" என எழுந்தவள் ஏக்கத்தோடு கூறினாள்!
"நீண்ட நேரம் ஆகிவிட்டது! காலையில் பெரிய பணி காத்துள்ளது"
"என்ன பணி அன்பரே?"
"சதிகாரர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சூரியவர்மரின் இறுதி அஞ்சலி காலையில் நடைபெற உள்ளது!"
"நானும் வருகிறேனே....? எனது தந்தையார் அவர் இருக்கும் நம்பிக்கையில் தான் என்னை சோழ தேசத்திற்கு அனுப்பி வைத்தார். சூரியவர்மரின் மறைவு பெரும் துயரத்தை அளிக்கிறது எனக்கு. எனது தந்தையாருக்கு தெரிந்தால் மிகவும் வருத்தப்படுவார். பழகுவதற்கு இனிமையான அவரை கடைசி வரை பார்க்கவே முடியவில்லை. எத்தனை பெரிய கொடுமை இது?" என தாளாத துயரத்தில் அவனைப் பார்த்து கூறினாள்!
"நீ வேண்டாம் தேவி! உனது வருகை தேவையற்ற பிரச்சனைக்கு வழி வகுத்து விடும். உனது பாதுகாப்பும் மிக முக்கியம். நீ எப்பொழுதும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்! சூரியவர்மரின் மறைவு குறித்து உனது தந்தையார் அறிந்து கொண்டால் கண்டிப்பாக உன்னை உடனே சாளுக்கியம் வரச் செய்து விடுவார்"
"நீங்கள் கூறுவதும் சரிதான்! திடீரென எனது தந்தையார் வரச்சொல்லி விட்டாள் நான் என்ன செய்வது?" விழிகளில் பதட்டத்தோடு அவனிடம் கேட்டாள!
"அப்படி நடக்காது என நம்புவோம். ஒருவேளை அவர் வரச் சொன்னால் உன்னை பாதுகாப்பாக சாளுக்கியம் அனுப்பிவைப்பேன்!"
"தங்களைப் பிரிந்து என்னால் செல்ல இயலாது! அப்படி நடக்கும் முன்னே நமது வாழ்விற்கு ஏற்ற ஒரு சரியான முடிவு எடுங்கள்! அதற்காக நான் எப்போதும் காத்திருப்பேன்!"
"கவலை வேண்டாம் கண்மணி! நீ வருந்தும் நிகழ்வு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்! நீ இன்றி என் வாழ்வு முழுமை பெறாது! "
"எனக்குத் தெரியும் அன்பரே! " என்றவள் தொடர்ந்து "சூரிய வர்மரின் மறைவிற்கு காரணமானவர்களை கண்டிப்பாக நீங்கள் தண்டிக்க வேண்டும்" என்றாள்.
"இதனை நீ சொல்லவும் வேண்டுமா? உன்னை போலவே நாகைக்கு அவரை தேடித்தான் வந்தேன்! இதுவரை அவரை நானும் சந்தித்ததே கிடையாது! அவரை முதன் முதலில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் தான் பார்க்க முடிந்தது என்னால்! அதை எண்ணி எண்ணி மிகவும் வருந்துகிறேன்! சதிகாரர்களுக்கு சரியான பாடம் கற்பிப்பேன்! அது எனது கடமையும்கூட! மேலும் அத்தோடு அவரால் தானே இந்தத் தங்க பதுமை கிடைத்தது!" அவளது பூரண வதனத்தை கையில் ஏந்தியவன் இதழில் கவிதை படித்தான்!
(தொடரும்.... அத்தியாயம் 57ல்)
No comments:
Post a Comment