🌾84. இறுதியில் வெற்றி யாருக்கு?🌾
இளம்வழுதியின் கையிலிருந்து கணையாழியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சதிகாரர்களின் முகத்தில் பெரும் திகில் படர்ந்து இருந்தது! சிலமடைந்த மண்டபத்தின் முன்பாக அவர்கள் மூட்டி இருந்த நெருப்பின் ஒளியில் பளீரென தெரிந்தது! அதனைக் கண்ட சூரனின் முகம் பேய் அடித்தது போல் மாறிவிட்டிருந்தது!
"இந்த கணையாழி நமது தலைவர் கோடியக்கரை மூர்க்கன் அவர்களுடையதுதான்! அவர் எப்போதும் தனது வலது கரத்தில் அணிந்திருப்பார்! எந்த நிலை வந்தாலும் இதனை மட்டும் எப்போதும் கழட்டி வைக்கவே மாட்டார்! அவருடன் இருந்த இத்தனை காலங்களில் நான் அறிவேன்! அந்தக் கணையாழி இவனது கையில் இருக்கிறது என்றால் இவன் கூறுவது உண்மையாகத்தான் இருக்க வேண்டும்! அப்படி என்றால் நமது தலைவர் கோடியக்கரை மூர்க்கன் உண்மையிலே இருந்து விட்டாரா? என்னால் நம்ப முடியவில்லை! அவரை அழிப்பது என்பது தன்னை எளிதான காரியம் அல்ல? மிகுந்த திறமைசாலி அவர்! நாம் அனைவருக்கும் நீண்ட காலமாக பயிற்சி அளித்து வந்தவர்! அவருடன் நாம் மேற்கொண்ட பயிற்சிகள் தான் இன்று சிறிதளவு வேணும் வாளைச் சுழட்டுகிறோம் என்றால் அதற்கு அவர்தான் காரணம்! அவர் மட்டும் இல்லை என்றால் நம்மால் இத்தனை எளிதாக வாள் பயிற்சியை பெற்றிருக்க முடியாது! எத்தனை லாபமாக நமக்கு கற்றுக்கொடுத்தார்! அவர் கற்றுக் கொடுத்தது இன்றும் என் கண் முன்னால் நிழலாய் தெரிகிறது! அப்படிப்பட்ட பெரும் மனிதர் இன்று நம்மிடையே இல்லையென இவன் கூறுவதை நம்பவும் முடியவில்லை! நம்பாமல் இருக்கவும் முடியவில்லை! இங்கு என்னதான் நடந்து கொண்டிருக்கிறது! ஒன்றுமே புரியவில்லை! இதற்கு ஒரு விடிவே கிடையாதா? இது என்ன சோதனையாக உள்ளது?" என அழுகையும் துடிப்புமாக சேர்ந்து கத்தி விட்டான் கூட்டத்தில் இருந்து ஒருவன்!
"அவனிடத்தில் கணையாழி இருப்பதால் மட்டும் அவன் கூறிய அனைத்தும் உண்மை என்று எவ்வாறு நம்புகிறீர்கள்? அவனிடம் உள்ள கணையாழி போலியாக கூட இருக்கலாமே! அப்படி இருக்கும் பொழுது, நீங்கள் எவ்வாறு அவன் கூறும் அத்தனையும் உண்மை என நம்புகிறீர்கள்! ஒரு வேளை நம்மிடையே பிளவினை உண்டாக்குவதற்காக இவன் ஏன் சதி செய்யக்கூடாது! இந்த கோணத்தில் ஏன் நீங்கள் நினைக்க மாட்டேங்கிறீர்கள்! எளிதாக எதிரி கூறுவதை நம்புமளவிற்கா நமது தலைவர் கோடியக்கரை மூர்க்கன் நம் அனைவருக்கும் பயிற்சி அளித்தார்! இவையெல்லாம் அவர் பார்க்க நேர்ந்தால் எத்தனை வருத்தப்படுவாரென நீங்கள் சிறிதளவு வேணும் யோசித்தது உண்டா? நீங்கள் செய்து கொண்டிருக்கும் காரியம் அனைத்தும் அவரது பெயருக்கும் புகழுக்கும் பெரும் கலங்கத்தை உண்டாக்க நினைக்கிறீர்கள்! இதுதான் நீங்கள் தலைவர் மேல் வைத்திருக்கும் மரியாதையா? நினைக்கவே வெட்கமாக உள்ளது! என்னால் உங்களது இந்த நிலையை எண்ணி கவலைப்படத்தான் முடிகிறது! நல்ல வேளை இவை யாவற்றையும் தலைவர் கோடியக்கரை மூர்க்கன் பார்க்கவில்லை! " என நண்பர்களை பார்த்து கொதித்துப் போய் பேசினான் சூரன்!
"இன்னும் எத்தனை காலத்திற்கு இவர்களிடத்தில் பொய்யான நம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருப்பாய்? அதனால் விளையப் போகும் நண்மைதான் என்ன? எத்தனை தூரம் இவர்களிடத்தில் மீண்டும் மீண்டும் நீ கூறினாலும் மாண்டு போன கோடியக்கரை மூர்க்கன் திரும்ப வரப்போவதில்லை! அதுதான் உண்மை! அதனை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்! இல்லாத ஒருவனைப் பற்றி தேவையற்ற கதைகளைப் பேசுவது காலத்தையும் நேரத்தையும் விரயமாக்குவதற்கு தான் பயன்படுமே தவிர வேறு ஒன்றுக்கும் பயன் தராது! "என சதிகாரன் சூரனைப் பார்த்து கூறினான் இளம்வழுதி!
"அவன்தான் அத்தனை உறுதியாக கூறுகிறானே! அதில் உண்மை இல்லாமல் இருக்குமா? இனி நம் கதி என்ன? யாரை நம்பி இனி பணியாற்றுவது? இருந்த ஒரே நம்பிக்கையும் இப்பொழுது செத்துவிட்டது! அப்படி இருக்க மேற்கொண்டு என்ன செய்வது? திக்கற்றுப் போய்விட்டோம்! நமது கதி அதோ கதிதான்!"என புலம்பத் தொடங்கி விட்டான் மாணிக்கம்!
"ஏன் இப்படி கடந்து புலம்பி தவிக்கிறீர்கள்! நான் மீண்டும் கூறுகிறேன் இந்த சதிகாரன் கூறுவது அத்தனையும் பொய்! நம்ப தயார் இல்லை! தேவையில்லாமல் கவலைப்படுவதை விட்டு இவனை இந்நேரம் துண்டு துண்டாக வெட்டி வீசியிருந்தால் நமக்குள் இப்படி கலகம் வந்திருக்காது? இவையெல்லாம் நமக்குத் தேவைதானா? அதனால்தான் கூறுகிறேன் விரைந்து சென்று இவன் கதையை முடித்து விடுங்கள்! மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம்! ஏன் நிற்கிறீர்கள்? இன்னும் ஏன் தாமதம்? உங்கள் காதுகளில் நான் கூறுவது விழவில்லையா? அல்லது உங்களது வீரமெல்லாம் செத்துப் போய்விட்டதா? மரம் போல் நிற்காமல் ஏதாவது பேசுங்கள்!"என ஆத்திரத்தில் தனது நண்பர்களை பார்த்து கத்தினான் சூரன்!
சதிகாரர்கள் இளம்வழுதியின் கையில் இருந்த கணையாழியை வெறித்துப் பார்த்தவர்கள் தங்களது விழிகளை சூரனை நோக்கி திருப்பி இருந்தார்கள்! சூரனை வெறுப்போடு பார்த்தார்கள்! சதிகாரர்கள் முகத்தில் பெரும் குழப்பம் நிலவிக் கிடந்தது! அவை என்னவென்று செய்ய முடியாத தவிப்பில் உண்டானது!
அப்போது இளம்வழுதி, "என் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டாம்! ஆனால், உங்கள் தலைவன் கோடியக்கரை மூர்க்கன் கணையாழியை என்னிடம் உள்ளது! உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்த கனையாழியை நீங்களே எடுத்து சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம், எனக்கொன்றும் கவலையில்லை, எத்தனை நேரம் வேண்டுமானாலும் சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்! ஆனால், முடிவு என்னவோ நான் கூறியதாகத்தான் இருக்கும்! அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை! ஏன் நிற்கிறீர்கள்.... வாருங்கள்.... வந்து எடுத்து சோதித்துப் பாருங்கள்! அங்கு ஏன் பார்க்கிறீர்கள்? உங்களுக்கு வேண்டிய உண்மை என்னிடம் உள்ளது! அவன் இடத்தில் பொய் மட்டும் தான் உள்ளது! யார் கூறுவது உண்மை என்று நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்! அதன் பின் உங்களுக்குள் ஒரு முடிவுக்கு வாருங்கள்! அவை எதுவாயினும் எனக்கு எந்த விதம் பயமும் இல்லை! பிறகு ஏன் நிற்கிறீர்கள் வாருங்கள்..." என சதிகாரர்களை நோக்கி கூறியவன் தனது கையில் இருந்த கணையாழியை சதிகாரர்களை நோக்கி வீசி எறிந்தான்! கூடி நின்று கொண்டிருந்த சதிகாரர்கள் காலடியில் கோடியக்கரை மூர்க்கனுடைய கணையாழி கீழே விழுந்து சதிகாரர்களை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தது!
கூட்டத்திலிருந்து ஒருவன் கீழே விழுந்து முறைத்துக் கொண்டிருந்த கோடியக்கரை மூர்க்கனின் கணையாழியை கையில் எடுத்தான்! கணையாழியை முன்னும் பின்னுமாக திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டிருந்தவன் விழிகள் பெரும் பிரமையில் மூழ்கி இருந்தது! மற்ற சதிகாரர்களும் அவனை நோக்கி வந்து கணையாழியை வாங்கி பார்த்தவர்கள் மௌனத்தை மட்டுமே மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்கள்! திடீரென அனைவரும் அமைதியாகிவிட்டதைத் கண்ட சூரன் முகம் பெரும் சோகத்தில் தவித்துக் கொண்டிருந்தது! அடுத்து அங்கு என்ன நடைபெறும் என தெரியாமல் குழம்பி போய் கிடந்தான்! அவனது வதனம் வியர்வை மழையில் நனைந்து விட்டிருந்தது! பெரும் வனம் சூழ்ந்த பகுதியில் வீசிக் கொண்டிருக்கும் அத்தனை காற்றிலும் அவனது வதனம் வியர்த்துப் போய் இருப்பதை கண்ட சதிகாரர்கள் விழிகள் எரிமலை வெடித்து வெளியேறிக் கொண்டிருந்த நிலையில் இருந்தன!
கூட்டத்தில் இருந்தவர்களிடம் இருந்து கணையாழியை கையில் வாங்கிய காத்தவராயன் விழிகளால் நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்த்தவன் பெரும் சோகத்தில் மூழ்கி விட்டான்! அவனது முகம் வெளிறிப் போய் இருந்தது! அவனால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை! மனம் கடந்து தவியாய் தவித்துக் கொண்டிருந்தது!
"என்ன காத்தவராயா? நீயாவது இப்போது உண்மையை கூறிவிடு! இந்த கணையாழி நமது தலைவர் கோடியக்கரை மூர்க்கனுடையது தானே! இதற்கு என்ன சொல்லப் போகிறாய்? இல்லை நீயும் அவருடைய கணையாழி இல்லை என்று மட்டும் பொய் கூறி விடாதே! அதன் பின் நடப்பதை யாராலும் தடுக்க முடியாது! நீங்கள் இருவரும் சேர்ந்து கொண்டு எத்தனை காலத்திற்கு எங்களை ஏமாற்றலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தீர்கள்? நீங்கள் செய்வது உங்களுக்கே சரியெனப்படுகிறதா? இதை தானா இத்தனை நாளும் நீங்கள் எங்களிடம் காட்டிவந்த நடிப்பு? அத்தனையும் பொய்யாய் போனதும் இப்படி வார்த்தைகள் தொண்டையில் அடைத்துக் கொண்டு கிடப்பதிலிருந்தே தெரிகிறது! உங்களுக்கே இவையெல்லாம் சரியாகப்படுகிறதா? நமது கூட்டத்தின் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குழி தோண்டி புதைத்து விட்டீர்கள்! சண்டாளப் பாவிகளா...! இதனால் நமக்கு உண்டாக இருக்கும் பெரும் கேடு இதற்கு யார் பொறுப்பேற்பது? இனி யார் நமக்கெல்லாம் வழிகாட்டுவது? இப்படி நிர்கதியாகக் கொண்டுவந்து எங்கள் அனைவரையும் நிறுத்தி விட்டீர்களே? உங்களை எல்லாம் நம்பி வந்ததற்கு இதுதான் நீங்கள் செய்யும் கைமாறா? நாங்கள் உங்களுக்கு அப்படி என்ன பாவம் செய்துவிட்டோம்? நீங்கள் கூறிய அத்தனையும் உண்மை என்று நம்பி, இத்தனை காலமாக உங்களுக்கு உண்மையாக தானே இருந்தோம்! அப்படி இருந்தும் எங்களை ஏன் தொடர்ந்து வஞ்சித்து வருகிறீர்கள்? இதனால் உங்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன? பாழாய் போன சத்தியத்தை செய்துவிட்டு, இப்போது கிடந்து தவிக்க வேண்டி இருக்கிறது! இவையெல்லாம் எங்களுக்குத் தேவை தான் போலும் " படபடவென்று கொட்டித் தீர்த்தான் மாணிக்கம்!
"நடந்து கொண்டிருக்கும் அத்தனைக்கும், இனி நடக்கவிருக்கும் இத்தனைக்கும் இவர்கள் இருவரும் மட்டுமே பொறுப்பாக இருக்க முடியும்! அதற்காக நாம் ஏன் பலியாக வேண்டும்! இனியும் இவர்களை நம்பி இங்கு இருப்பது நமக்கு நாமே சவக்குழி வெட்டிப் படுத்துக் கொள்வதற்கு சமமானது! அத்தகைய வேலையை நாம் செய்தல் கூடாது! இதனால் எத்தனை பெரிய துன்பம் வந்தாலும் பார்த்துவிட வேண்டியதுதான்! அதற்காக தெரிந்தே போய் பெரும் குழியில் நாமாக விழுவது எனக்கு என்னவோ சரியாக படவில்லை!" எனது கூட்டத்தில் இருந்த மற்றொருவன் கூறினான்!
"அடேய் முட்டாள்களே! இந்த சதிகாரன் உங்களை எல்லாம் நன்றாக குழப்பி விட்டான்! அங்கு பாருங்கள்! அவன் எத்தனை துணிச்சலாக நின்று கொண்டிருக்கிறான்! அவனை அழிப்பதை விட்டு விட்டு தேவையில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்! முதலில் அவன் கதையை முடியுங்கள்! மற்றவற்றை பிறகு பேசிக் கொள்ளலாம்" என சதிகாரர்களை பார்த்து கூறினான் சூரன்!
"இன்னும் இவன் நம்மளை முட்டாள் என நினைத்து விட்டான் போலும்! இவன் கூறும் எதளையும் கேட்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை! நமக்கு உண்மையில்லாத துரோகி இவன்! இவனிடத்தில் இனி என்ன பேச்சு வேண்டி கிடக்கிறது? நாம் நம் வழியைப் பார்த்து சென்றுவிடலாம்! இதுதான் சரியாக இருக்கும் அதனை விடுத்து, இனியும் இவனுடன் இருந்தோம் என்றால் நமக்கு நாமே சவக்குழி வெட்டிய கதை தான் ஆகும்! அப்படியொரு நிலை நமக்குத் தேவையில்லை! இதனால் வரையில் இந்த கூட்டத்தில் இருந்ததற்கு கிடைத்த பலன் என்ன? நமது நண்பர்கள் பல பேர் கொடூரமான முறையில் இறந்து போனதுதான் மிச்சம்! அவர்களது குடும்பம் இன்று நிர்கதியாக உள்ளது! நாளை நமது நிலையும் அதுதான்! அதனை நோக்கித்தான் இதுநாள் வரையில் நம்மை செயல்படுத்திக் கொண்டிருந்தான்! இப்பொழுதும் அதற்குள் தான் நம்மை தள்ளிவிடப் பார்க்கிறான்! இப்பொழுதும் நாம் விழித்துக் கொள்ளவில்லை என்றால் நம்மை காப்பாற்ற யாராலும் இயலாது! இன்னும் என்ன தயக்கம்? வாருங்கள்... புறப்படலாம்....!" என தனது நண்பர்களிடம் கூறினான் மாணிக்கம்!
திடீரென அது நடந்து விட்டது!
(தொடரும்...... அத்தியாயம் 85 ல்)
No comments:
Post a Comment